உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

 பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

உடுமலை: மடத்துக்குளத்தில், மாவட்ட சட்ட பணிகள் குழு சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழக அரசு சார்பில், பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில் 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி சந்தோஷ் தலைமை வகித்தார். இம்முகாமில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது, குழந்தைத் திருமணம் எவ்வாறு சமூக வளர்ச்சிக்கு எதிராக உள்ளது என்பது குறித்தும், பெண் கல்வியின் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்பங்களை தடுத்தல், குழந்தைகளின் உரிமைகள், 6 முதல், 14 வயதுடைய குழந்தைகளுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை என வலியுறுத்தப்பட்டது. மாவட்ட சமூக நலத்துறை மைய நிர்வாகி ராஜேஸ்வரி, மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழு வக்கீல் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை