சிறுமி கடத்தல்; வாலிபர் கைது
திருப்பூர்; திருப்பூரில், 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூரை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. அரசு பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவரிடம், அதே பகுதியை சேர்ந்த, சுப்ரமணி, 25 என்ற வாலிபர் பழகி வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி, வீட்டில தனியாக இருந்தார்.அப்போது, சிறுமியின் வீட்டுக்கு வந்த வாலிபர் பேசி வந்தார். இதையடுத்து, ஆட்டோவில் இருவரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். சிறுமியின் பெற்றோர் வருவதை பார்த்த வாலிபர், சிறுமியை ஆட்டோவில் அமர வைத்து அழைத்து சென்றார்.பெற்றோர் சத்தம் போடவே, ஆட்டோவை நிறுத்தாமல் சிறுமியை அழைத்து சென்றார். புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தனர். சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்த வாலிபர், ஆட்டோவில் அழைத்து சென்றது தெரிந்தது.சிறுமியை மீட்ட போலீசார், வாலிபரை கைது செய்தனர்.