உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவியர் கால்பந்து போட்டி விவேகானந்தா முதலிடம்

மாணவியர் கால்பந்து போட்டி விவேகானந்தா முதலிடம்

திருப்பூர் : பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட மாணவியர், 19 வயது பிரிவுக்கான கால்பந்து போட்டி, கணியாம்பூண்டி, மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.பள்ளி தாளாளர் சங்கர், பள்ளி ஒருங்கிணைப்பாளர் வித்யா உள்ளிட்டோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். மாவட்டத்தில் ஏழு குறுமையங்களில், குறுமைய அளவில் வெற்றி பெற்று முதலிடம் பெற்று, ஏழு அணிகள் பங்கேற்றன. காலிறுதி, அரையிறுதி போட்டிகளை தொடர்ந்து, நேற்று மாலை இறுதி போட்டி நடந்தது.திருப்பூர் தெற்கு குறுமையத்தை சேர்ந்த விவேகானந்தா வித்யாலயா - தாராபுரம் குறுமையத்தை சேர்ந்த எம்.எஸ்.என்., மெட்ரிக் பள்ளி அணிகள் மோதின. துவக்கம் முதலே அதிரடி காட்டிய விவேகானந்தா அணி, 3 - 0 என்ற கோல் கணக்கில், வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை