இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
திருப்பூர்,; ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் அல்லாபிச்சை, 49; இறைச்சி வியாபாரி. -2017ல், திண்டுக்கல்லிலிருந்து அரசு பஸ்சில் திருப் பூர் நோக்கி பயணித்தார்.அவர் வந்த பஸ்சும், மதுரை நோக்கிச் சென்ற மற்றொரு அரசு பஸ்சும்,கே.ஆண்டிபாளையம் அருகே மோதியது.இதில், அல்லாபிச்சையின் இடது கை துண்டானது. தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். தனக்கு இழப்பீடு கேட்டு அவர், திருப்பூர் மாவட்ட சிறப்பு வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், வழக்கு தொடுத்தார். அவர் தரப்பில் வக்கீல்கள் முருகேசன், சத்யா ஆஜராகினர். இதில் அவருக்கு, 30.75 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால் மேல் முறையீடு செய்தார்.விசாரித்த தீர்ப்பாயம், வட்டியுடன் சேர்த்து 49 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது. அதனையும் வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி பாலு உத்தரவிட்டார். இதனால், கோர்ட் ஊழியர்கள், அரசு பஸ்சை ஜப்தி செய்து, கோர்ட் வளாகத்தில் கொண்டு சென்று நிறுத்தினர்.