உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வி.கள்ளிப்பாளையத்துக்கு அரசு பஸ்கள் டாட்டா

வி.கள்ளிப்பாளையத்துக்கு அரசு பஸ்கள் டாட்டா

பல்லடம்: பல்லடம்,- தாராபுரம் ரோடு, வி.கள்ளிப்பாளையம் சுற்றுவட்டார கிராமத்தில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.தினசரி, பல்லடம், திருப்பூர், கோவை செல்லும்தொழிலாளர்கள், பொதுமக்கள் பலர், பெரும்பாலும் அரசு பஸ்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், கள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதாக இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.அப்பகுதியினர் கூறியதாவது:கள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப்பில், பஸ்கள் கட்டாயம் நின்று செல்ல வேண்டும் என்ற அரசாணை உள்ளது. இதனால், போக்குவரத்து கழக அதிகாரிகளின் உத்தரவின் பேரில், அரசு பஸ்கள் கள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நின்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இங்கிருந்து, தொழில், வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, திருப்பூர், பல்லடம், கோவை, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல வேண்டி உள்ளது.ஆனால், இவ்வழியே செல்லும் பெரும்பாலான அரசு பஸ்கள், கைகாட்டினாலும் கள்ளிப்பாளையத்தில் நிற்பதில்லை. கடந்த காலத்தில் இதே போன்ற நிலை ஏற்பட்டபோது, புகார் அடிப்படையில், சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில், அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆனாலும், கள்ளிப்பாளையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. பெரும்பாலான அரசு பஸ்கள் இந்த உத்தரவை பின்பற்றுவதில்லை. போக்குவரத்து கழக அதிகாரிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ