உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கோரிக்கைக்காக மறியல் அரசு ஊழியர்கள் கைது

 கோரிக்கைக்காக மறியல் அரசு ஊழியர்கள் கைது

திருப்பூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 'அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை, மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். அலுவலக பணி நேரத்துக்கு பின்னரும், விடுமுறை தினங்களிலும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதை கைவிட வேண்டும். காலை உணவு திட்டத்தை, அனைத்து பள்ளிகளுக்கும் விரிவு படுத்தி, சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்' என, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து, தடையை மீறி, ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்த போலீசார், அருகிலுள்ள மண்டபத்தில் தங்கவைத்து, மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை