உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு திட்டத்தில் குறைந்த பணியாளர்கள் சம்பளம் இழுபறியால் மாற்றம்

அரசு திட்டத்தில் குறைந்த பணியாளர்கள் சம்பளம் இழுபறியால் மாற்றம்

உடுமலை : அறுவடை சீசன் மற்றும் சம்பளம் வழங்குவதில் இழுபறியால், வேலை உறுதி திட்டத்தில், ஊராட்சிகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், முன்பு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர்.நீர்நிலைகள் பராமரிப்பு, மரக்கன்று நட்டு பராமரித்தல் உட்பட பணிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. பின்னர், சிறு, குறு விவசாயிகளின் விளைநிலங்களில், விவசாய மேம்பாட்டு பணிகளுக்கு, வேலை உறுதி திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தும் வகையில், திட்டம் மாற்றப்பட்டது.சில ஊராட்சிகளில், சிறு, குறு விவசாயிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே ஒரே விளைநிலத்தில், தொடர்ச்சியாக பணிகளை மேற்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.பெரும்பாலான ஊராட்சிகளில், விதிகளின்படி பணிகளை தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது.எனவே, கடந்த ஒரு மாதமாக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், பணியாற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஊராட்சிக்கு, 50க்கும் குறைவான பணியாளர்கள் மட்டுமே திட்டப்பணிகளுக்கு சென்று வருகின்றனர்.தொழிலாளர்கள் கூறியதாவது:மக்காச்சோளம், கொண்டைக்கடலை, கொத்தமல்லி உட்பட தானியங்கள் அறுவடை சீசனின் போது, வேலைவாய்ப்பு அதிகரித்து, கூலியும் உயரும். இதே வேளையில், வேலை உறுதி திட்டத்தில், நீண்ட இழுபறிக்குப்பிறகே, சம்பளம் வழங்கப்படுகிறது.பல மாதங்கள் சம்பளத்துக்காக காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. எனவே, அறுவடை பணிகளுக்கு செல்லவே பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். திட்டத்தில், நிலுவையில்லாமல், சம்பளம் வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ