மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவி தேசிய போட்டிக்கு தகுதி
10-Jan-2025
திருப்பூர் : ராஞ்சியில் நடந்த தேசிய தடகள போட்டியில், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தங்கம் வென்று அசத்தினார்.ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில், இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம், (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், 68 வது தேசிய தடகள போட்டி நடந்தது. இதில், 14 வயது பிரிவு, 80 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி, வர்ஷிகா முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லாஅமலோற்பமேரி, பள்ளி உடற்கல்வி இயக்குனர் முருகேஸ்வரி, விளையாட்டு ஆசிரியர்கள், பயிற்சியாளர், ரைசிங் ஸ்டார் அகாடமி சுரேஷ்ராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர்.
10-Jan-2025