மேலும் செய்திகள்
கால்பந்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
06-Nov-2025
பெருமாநல்லுார்: குத்து சண்டை போட்டியில், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். பள்ளிக்கல்வி துறை சார்பில், பாரதியார் தினம் மற்றும் சுதந்திர தின விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில், 19 வயது பிரிவு, 46 மற்றும் 49 கிலோ எடை பிரிவில், கணக்கம்பாளையம் பள்ளி மாணவன் சக்திவேல், முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கம் பெற்றார். அதுபோல், 64, 69 கிலோ எடை பிரிவில், பிளஸ் 2 மாணவன் ஸ்ரீ விஷ்ணு, முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கம் பெற்றார். 17 வயது, 60 மற்றும் 63 கிலோ எடை பிரிவில் மாணவர் தனுஷ், இரண்டாம் பரிசு பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பிரகாஷ், ஆசிரியர் சர்மிளா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சண்முகசுந்தரம், பயிற்சியாளர் சரவணமுத்து ஆகியோர் பாராட்டினர்.
06-Nov-2025