மருத்துவராகும் நம்பிக்கையுடன் அரசுப்பள்ளி மாணவர்கள்; கைகொடுக்கிறது நீட் தேர்வு பயிற்சி
பள்ளி கல்வித்துறை சார்பில் துவங்கப்பட்டுள்ள, 'நீட்' பயிற்சி வகுப்பு கிராமப்புற மாணவருக்கு பெரிதும் பயனுள்ளதாக மாறியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 'நீட்' தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவ, மாணவியர் தயாராக ஏதுவாக, 'நீட்' பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.மாவட்டத்தில், திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி; தாராபுரம், என்.சி.பி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி; பல்லடம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி; உடுமலை, ஆர்.கே.ஆர்., மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து மையங்களில், காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணிவரை பயிற்சி வழங்கப்படுகிறது.இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்கள் நான்கு பிரிவுகளாக அனுபவம் வாய்ந்த அரசு பள்ளி ஆசிரியர் மூலம் நடத்தப்படுகிறது. ஏப்ரல், 1ல் துவங்கிய பயிற்சி மே, 2 வரை நடைபெறும். தற்போது, 351 மாணவ, மாணவியர் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.நகர்ப்புறங்களில் வசிக்கும் மாணவருக்கு பயிற்சி மையம் அருகிலேயே உள்ளது. இருப்பினும், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் இருந்து, கிராமங்களில் இருந்து கூட மாணவ, மாணவியர் 'நீட்' தேர்வுக்கான பயிற்சியில் ஆர் வமுடன் பங்கேற்கின்றனர். பயிற்சிக்காக, தினமும் அதிகாலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு,மாலையில் வீடு திரும்புகிறவர்களும் உள்ளனர்.பயிற்சியில் இணைய இன்னும் வாய்ப்புமாவட்ட 'நீட்' தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறுகையில், ''ஐந்து மையங்களில் தற்போது வகுப்புகள் துவங்கி நடந்துவந்தாலும், இதுவரை 'நீட்' பயிற்சியில்இணையாத மாணவ, மாணவியர் தற்போதும் பயிற்சியில் இணையலாம். பயிற்சி நடக்கும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு, நீங்களும் பயிற்சியில் இணையலாம். ஒவ்வொரு வார இறுதியிலும் மாதிரி தேர்வு நடத்தப்படும். 'நீட்' தேர்வை எதிர்கொள்வது குறித்து அனைத்து விளக்கங்களும் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு தெரிவிக்கப்படும்'' என்றார்.