உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டிராக்டர் மோதி அரசு பள்ளி ஆசிரியை, மாணவி பலி

டிராக்டர் மோதி அரசு பள்ளி ஆசிரியை, மாணவி பலி

வெள்ளகோவில்: வெள்ளகோவிலில், பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை, மாணவி பலியாகினர்.திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே அகரப்பாளையம் புதூர் நகராட்சி ஆரம்ப பள்ளியில் ஆசிரியை சரஸ்வதி (45), இன்று காலை வெள்ளகோவில், இந்திரா நகரில் இருந்து தனியார் வேன் ஓட்டுநர் கார்த்திக் மகள் ராகவி (10), அவரது சகோதரி யாழினி (8) ஆகியோரை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச்சென்றார். அப்போது செம்மாண்டபாளையம் மளிகை கடை அருகே சென்ற போது நிலை தடுமாறி எதிரே வந்த டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தியே அரசு பள்ளி ஆசிரியை சரஸ்வதி (45), 5ம் வகுப்பு மாணவி ராகவி (10) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த யாழினி (8) காங்கேயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை