உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டில் காய வைக்கப்படும் தானியம் உலர்களம் இல்லாததால் சிரமம்

ரோட்டில் காய வைக்கப்படும் தானியம் உலர்களம் இல்லாததால் சிரமம்

உடுமலை : லர் கள வசதியில்லாததால், ரோட்டில் தானியங்களை காய வைக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பெரியகோட்டை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை அருகே பெரியகோட்டை சுற்றுப்பகுதியில், விவசாயம் பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கும், கிணற்று பாசனத்துக்கும் ஆயிரம் ஏக்கர் வரை, ஆண்டு முழுவதும் பல்வேறு சாகுபடி அப்பகுதியில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, மண்டல பாசன காலத்தில், மக்காச்சோளம் சாகுபடியாகிறது.அறுவடைக்குப்பிறகு, மக்காச்சோளத்தை காய வைத்து தரம் பிரிப்பதற்கு, அப்பகுதியில் எவ்வித வசதியும் இல்லை. இதனால், மக்காச்சோளம், சோளம், கம்பு மற்றும் இதர தானியங்களின் அறுவடை காலத்தில் விவசாயிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: ஈரப்பதம் அதிகமாக இருந்தால், மக்காச்சோளத்தை விற்பனை செய்ய முடியாது. எனவே, உலர்களத்தில், காய வைத்து, தரம் பிரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், கிராமத்தில் உலர்கள வசதியில்லை. இதனால், ஆபத்தான முறையில், நான்கு வழிச்சாலை மற்றும் இதர ரோடுகளில், மக்காச்சோளத்தை காய வைக்க வேண்டியுள்ளது.கிராமத்திலுள்ள, அரசு நிலத்தில், உலர் களம் மற்றும் தானியங்களை இருப்பு வைக்க குடோன் கட்டித்தர வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.ஒழுங்கு முறை விற்பனை கூடங்களுக்கு தானியங்களை எடுத்து செல்வதில், பல்வேறு சிரமங்கள் உள்ளது. எனவே, கோரிக்கை குறித்து பரிசீலித்து வேளாண் விற்பனை குழு வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை