உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நவ., 1ல் கிராமசபை கேள்விக்குறி

நவ., 1ல் கிராமசபை கேள்விக்குறி

திருப்பூர், : நவ., 1 அன்று கிராம சபை கூட்டம் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, வரும், நவ., 1ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டுமென, ஊரக வளர்ச்சித்துறை தரப்பில் இருந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது.பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை, பொது சுகாதார பணிகள், அடிப்படை கட்டமைப்பு குறித்து விவாதிக்க அறிவுறுத்தப்பட்டது. தீபாவளிக்கு மறுநாளான நவ., 1ஐ, அரசு விடுமுறையாக அறிவித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால், நவ., 1ம் தேதி கிராமசபை கூட்டம் நடக்குமா அல்லது வேறு நாளில் நடக்குமா, ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. அரசு ஓரிரு நாளில் முடிவெடுத்து, அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை