மேலும் செய்திகள்
அரசு பள்ளி ஆண்டு விழா
03-Feb-2025
உடுமலை; பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், முப்பெரும் விழா நடந்தது.பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் கூடல் விழா, விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் சரவணன் வரவேற்றார். உதவி தலைமையாசிரியர் ஜெகநாத ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தார்.தொழிற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் தமிழ் கூடல் விழா குறித்து பேசினார். மாணவி ஹாசினியின் பலகுரல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இசை நிகழ்ச்சி, பள்ளி மாணவர்களின் நாடகம் நடந்தது.மேலும், வேறு பள்ளி மாணவர்களும் விழாவில் பங்கேற்று பல்வேறு திறன்களை வெளிப்படுத்தினர். மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், லக்கி கார்னர் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டுவிழாவில் மாணவர்களின் கவிதை வாசிப்பு, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.தமிழாசிரியர் ரேணுகா, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
03-Feb-2025