உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை கொட்டும் விவகாரம் பசுமைத்தீர்ப்பாயம் அதிரடி; கலெக்டர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

குப்பை கொட்டும் விவகாரம் பசுமைத்தீர்ப்பாயம் அதிரடி; கலெக்டர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

திருப்பூர்; திருப்பூர் அருகே பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்படுவது குறித்து கலெக்டர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சியிலுள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைக்கழிவுகள் தரம்பிரிக்காமல் கொட்டப்படுவதாகவும், இதை தடை செய்யுமாறு கோரியும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சதீஷ்குமார், பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிட்டார். இம்மனு, தீர்ப்பாயத்தில், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் கோர்லபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், 'திருப்பூர் கலெக்டர் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள், நேரில் சென்று பார்வையிட்டும், அங்குள்ள குப்பையை அகற்ற மேற்ெகாள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும். மீண்டும் விசாரணை வரும் ஜன. 22 ம் தேதி நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.---திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்படும் இடம்இடம்: பொங்குபாளையம் ஊராட்சி.

மாற்று ஏற்பாடு

கமிஷனர் தகவல்திருப்பூரில் தினமும் 700 மெட்ரிக் டன் குப்பை சேகரமாகிறது. இதில், 200 டன் குப்பை நுண் உரமாக்கல் மையங்களில் கையாளப்படுகிறது. இதுதவிர, பிரிக்கும் மையத்தில் மக்காத பாலிதீன் போன்ற பொருட்கள் பிரித்து மாற்று பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது 200 - 300 மெட்ரிக் டன் அளவு குப்பையை பயோகாஸ் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் இது செயல்பாட்டுக்கு வரும்.திருப்பூர், கோவை, மதுரை மாநகராட்சிகளில் குப்பை பிரிப்பு மையங்கள் அமைக்க நகராட்சி நிர்வாகத் துறை முடிவு செய்துள்ளது. அவ்வகையில், திருப்பூரிலும் குப்பைகளை தரம் பிரிக்கும் வகையில் மையம் துவங்கப்படவுள்ளது. இதற்காக, 10 ஏக்கர் பரப்பில் இரு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெண்டர் பணி முடியும் நிலையில் உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் செயல்பாட்டுக்கு வரும் போது குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.- ராமமூர்த்தி, கமிஷனர், திருப்பூர் மாநகராட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி