உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொதுமக்கள் கரம்கோர்ப்பு கிராமத்தில் மலர்ந்த பசுமை

பொதுமக்கள் கரம்கோர்ப்பு கிராமத்தில் மலர்ந்த பசுமை

புவி வெப்பமயமாதலை தவிர்க்க வேண்டுமானால் மரங்கள் வளர்ப்பு அவசியம். வளர்ச்சிப் பணி என்ற பெயரிலும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் கோடிக்கணக்கான மரங்கள் அழிக்கப்படுகின்றன.வெட்டப்படும் மரங்களுக்கு இணையாக புதிய மரங்கள் நட்டால் மட்டுமே இயற்கைச் சமநிலையை பேணிக்காக்க முடியும்.பொங்கலுார் - காட்டூர் ஊராட்சியில் அப்பகுதி பொதுமக்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள் உள்பட பலரும் ஒன்றிணைந்து, பல்லடம் வன அமைப்புடன் சேர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன் மரம் நடும் இயக்கத்தை துவக்கினார்கள்.ஊராட்சியில் உள்ள பொது இடங்கள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள், ரோட்டோரங்கள் என எங்கெங்கு இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் வேம்பு, புலி, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டார்கள். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு, அருகில் உள்ள விவசாயிகளுடன் இணைந்து மரங்களுக்கு சொட்டு நீர் பாசன கட்டமைப்பை உருவாக்கினார்கள்.அவர்களின் முயற்சிக்கு தற்போது, கைமேல் பலன் கிடைத்துள்ளது. கிராமம் முழுவதும் ஆயிரக்கணக்கான மரங்கள் பசுமை போர்வை போர்த்தியது போல காட்சி அளிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ