கூட்டுறவு பணியாளருக்கு நாளை குறைகேட்பு கூட்டம்
திருப்பூர்; கூட்டுறவு பணியாளர்களுக்கான குறைகேட்பு கூட்டம், நாளை நடைபெறுகிறது.கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி அறிக்கை: திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில், கூட்டுறவு பணியாளர்களுக்கான குறை கேட்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட முகாம்களில், 48 மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளது.மூன்றாவது குறைகேட்பு முகாம், வரும் 8ம் தேதி (நாளை) காலை, 10:30 மணிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. திருப்பூர் மண்டலத்திலுள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் ஓய்வு பெற்றோர், பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பயனாளர்கள், தங்கள் குறைகளை மனுவாக எழுதி வழங்கலாம். அம்மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.