உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலையில் குரூப் - 4 இலவச பயிற்சி துவக்கம்

உடுமலையில் குரூப் - 4 இலவச பயிற்சி துவக்கம்

உடுமலை,: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், உடுமலையில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.அரசு பணியாளர் தேர்வாணையம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு நடத்த உள்ளது.இத்தேர்வில் பங்கேற்கும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு, உடுமலை எக்ஸ்டென்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள கூடுதல் பயிற்சி மையத்தில், வரும், 28ம் தேதி துவங்க உள்ளது.இப்பயிற்சியில், மாதம் இருமுறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது, 0421- -2999152, 94990 55944 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம், என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ