உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகைக்கடன் பெற வழிகாட்டுதல்; பாரதிய கிசான் சங்கம் வரவேற்பு

நகைக்கடன் பெற வழிகாட்டுதல்; பாரதிய கிசான் சங்கம் வரவேற்பு

உடுமலை; நகைக்கடனுக்கான புதிய வழிகாட்டுதல்களை திரும்ப பெற, மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என பாரதிய கிசான் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கு, நகைக்கு உண்டான ரசீது வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியது. இதனால், அவசரத்தேவைக்கு நகைகளை அடமானம் வைத்து பணம் பெறும் சூழலில் அனைத்து தரப்பினரும் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது.இது குறித்து, பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய தென்னை அணி ஒருங்கிணைப்பாளர் கூறியிருப்பதாவது: வங்கிகளில் தங்க நகைக்கடன் பெற, புதிய வழிகாட்டுதல்களை திரும்ப பெற, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.வங்கிகளுக்கும், பொதுமக்களுக்கும் இது சாதகமான நடைமுறை என்பதால், தற்போதுள்ள வழிகாட்டுதல்களே தொடர வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை