உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி மகிழ்வித்து மகிழ்ந்த உள்ளங்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி மகிழ்வித்து மகிழ்ந்த உள்ளங்கள்

பல்லடம்: பல்லடம் பகுதி மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு, திருப்பூர் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில், நல உதவி வழங்கப்பட்டது. திருப்பூர் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை, ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நல உதவிகள் செய்து வருகின்றது. அவ்வகையில், பல்லடம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சிலருக்கு, நல உதவி வழங்கப்பட்டது. பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும், 10 மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு ஐந்து கிலோ அரிசி சிப்பங்கள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை தலைவர் லீலா ஜெகன் மற்றும் பொருளாளர் சரவணகுமார் ஆகியோர் இதில் பங்கேற்றனர். மங்கலம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிலருக்கும் இதேபோல் நல உதவி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ