உயர் மின் கோபுர வழித்தடம்; விவசாயிகள் வேண்டுகோள்
திருப்பூர்; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில், காங்கயம், தாராபுரம், வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் அளித்த மனு:டாடா சோலார் நிறுவனம், காங்கயம், தாராபுரம் தாலுகாக்களில் காற்றாலைகளை நிறுவி மின் உற்பத்தி செய்யவும், காங்கயம் தாலுகா மூத்த நாயக்கன் வலசு அருகே துணை மின்நிலையம் அமைத்து, உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, தாராபுரம் வழியாக, துரம்பாடி கிராமத்திலுள்ள துணை மின்நிலையத்துக்கு கொண்டுசெல்லவும் திட்டமிட்டுள்ளனர்.17 கி.மீ., துாரத்துக்கு விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகளை துவக்கியுள்ளனர்.இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்; நிலத்தின் மதிப்பு வீழ்ச்சி அடையும். விவசாயிகள் பாதிக்காதவகையில், அமராவதி ஆற்றோரம் கொண்டுசெல்லும்வகையில் மாற்றி அமைக்க வேண்டும். விவசாயிகளின் கருத்துகளை கேட்காமல், முன்நுழைவு அனுமதி வழங்க கூடாது.