உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புது பஸ் ஸ்டாண்டில் உயர்மின் விளக்கு தேவை

புது பஸ் ஸ்டாண்டில் உயர்மின் விளக்கு தேவை

உடுமலை; உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், போதிய வெளிச்சம் இல்லாததால், பயணியர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, அங்கு உயர்மின் விளக்கு அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. அங்கு இட நெருக்கடி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன், புது பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும், கோவை, பொள்ளாச்சி மார்க்கமாக செல்லும் புறநகர் பஸ்கள், கிழக்கு பகுதிக்கு செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பஸ்சுக்கு காத்திருக்கும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, உயர்மின்விளக்கை நகராட்சி அதிகாரிகள் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ