உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயர்கல்வி ஆலோசனைகள் வசமாகும் தினமலர் வழிகாட்டி நாளை துவக்கம்! மாணவர் வாழ்க்கை ஒளிவீசும்

உயர்கல்வி ஆலோசனைகள் வசமாகும் தினமலர் வழிகாட்டி நாளை துவக்கம்! மாணவர் வாழ்க்கை ஒளிவீசும்

திருப்பூர்; பிளஸ் 2 முடித்து, உயர்கல்வி தொடர்வது தொடர்பாக, மாணவர்களுக்கு வழிகாட்டும், 'தினமலர்' கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி (கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான நிகழ்வு), திருப்பூரில் நாளையும் (5ம் தேதி), நாளை மறுதினமும் (6ம் தேதி) நடக்கிறது.உயர்கல்வியை தேர்வு செய்ய காத்திருக்கும் மாணவர்கள், பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம்; எந்த படிப்புக்கு எந்த வேலை கிடைக்கும்; வேலைவாய்ப்புக்கான திறன்களை இப்போதிருந்தே வளர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து மாணவ, மாணவியருக்கு வழிகாட்ட, 'தினமலர்' கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில், நாளையும் (5ம் தேதி), நாளை மறுநாளும் (6ம் தேதி) நடக்கிறது. காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.'தினமலர்' நாளிதழுடன், கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ், கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம், கே.எம்.சி.எச்., டாக்டர் என்.ஜி.பி., எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுன்ட் ஆப் இந்தியா ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன.

என்னென்ன படிப்பு?என்னென்ன வாய்ப்பு?

வழிகாட்டி கருத்தரங்கில் புத்தம்புது படிப்புகள், அரசு வேலை வாய்ப்புகள், 'நீட்' தேர்வு குறித்த பிரத்யேக விளக்கம் அளிக்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், 'ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்', 'ஆக்மென்டட் ரியாலிட்டி', 'சோஷியல் மீடியா', 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்', 'பிக்டேட்டா', 'ரோேபாடிக்ஸ்', சட்டம், அறிவியல், கலை உட்பட ஏராளமான பிரிவுகள், அவற்றில் உள்ள வாய்ப்புகள் குறித்து துறை சார்ந்த நிபுணர்கள், பேராசிரியர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.வேலைவாய்ப்பை எளிதாக்கும் 'டாப்' துறைகள், படிக்கும் போதே வேலைவாய்ப்பை வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து நிபுணர்கள், கல்வியாளர்கள் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோருக்கு ஆலோசனைகளை அள்ளித்தர உள்ளனர்.

'அப்ளிகேஷன்' முதல்'அட்மிஷன்' வரை

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் உயர்கல்வி ஆலோசனைகளை பெறுவதுடன், கண்காட்சி அரங்கையும் பார்வையிடலாம்.'அப்ளிகேஷன்' முதல் 'அட்மிஷன்' வரை கல்வி நிறுவனங்களின் அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெற, மாணவ, மாணவியர் பெற்றோர் பார்வையிட, முன்னணி பல்கலைக்கழகங்கள் உட்பட, 70க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது; அனுமதி இலவசம்.

பங்கேற்க என்னசெய்ய வேண்டும்?

இதில், பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர், 95667 77833 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு, RGN என்று டைப் செய்து பதிவு செய்யலாம். உயர்கல்வி குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் நேரில் விடை காண உடனே பதிவு செய்யுங்கள். கருத்தரங்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விரைவாகவும், சரியாகவும் பதில் அளிப்பவருக்கு 'லேப்டாப்' மற்றும் 'டேப்' மற்றும் வாட்ச் பரிசாக வழங்கப்பட உள்ளது.

யார்... யார்...என்ன தலைப்பு?

கருத்தரங்கில், 'எதிர்காலத்தில் ஆளப்போகும் தொழில் நுட்பங்கள்' எனும் தலைப்பில், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ்காந்தி, 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' எனும் தலைப்பில், இந்திய பாதுகாப்புத்துறை ராணுவ விஞ்ஞானி டாக்டர் டில்லிபாபு, 'நீட், ஜே.இ.இ., தேர்வுகளில் சாதிப்பது, டிப்ஸ்' எனும் தலைப்பில் கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர் பேச உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ