உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதல்வர் வருகை எதிரொலி நெடுஞ்சாலைத்துறை முன்னேற்பாடு

முதல்வர் வருகை எதிரொலி நெடுஞ்சாலைத்துறை முன்னேற்பாடு

பல்லடம் :வரும், 23ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின், திருப்பூர் மற்றும் உடுமலையில் நடக்கவுள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனை முன்னிட்டு, முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.திருப்பூரில் இருந்து தரைவழிப் பயணமாக செல்லும் முதல்வர், பல்லடம் வழியாக உடுமலை செல்வதால், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உஷாராகி உள்ளனர். முதல்வர் வருகை எதிரொலியாக, பல்லடம்- - திருப்பூர் ரோடு மற்றும் உடுமலை ரோடு ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. ரோட்டின் இருபுறமும் உள்ள முட்செடிகள், புதர்கள் உள்ளிட்டவை அகழ் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.மையத்தடுப்பு கற்கள், மரங்கள், மின் கம்பங்கள் உள்ளிட்டவற்றுக்கு வர்ணம் பூசப்பட்டு வருகிறது. ரோட்டில் உள்ள பள்ளங்கள், குழிகள் மூடப்பட்டு, ரோடு சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த நான்கு நாட்களாகவே இந்த பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. முதல்வர் வர, இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அதற்கு முன்னதாகவே, தயாராகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !