மேலும் செய்திகள்
மலைவாழ் மக்களுக்குசிறப்பு திட்ட முகாம்
07-Mar-2025
உடுமலை; உடுமலை வனத்துறை அலுவலகத்தை, மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம், கோடந்துார் மலைவாழ் மக்கள் குடியிருப்பில், 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள், தேன், வடுமாங்காய் உள்ளிட்ட வனப்பொருட்கள் சேகரித்தும் விற்பனை செய்து வருகின்றனர்.மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில், பிரசித்தி பெற்ற கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு, மலைவாழ் மக்கள் கடைகள் அமைத்து, பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், வனப்பொருட்கள் சேகரிக்கவும், கடைகள் அமைத்து விற்பனை செய்யவும் தடை விதித்ததோடு, மலைவாழ் மக்கள் மக்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்கள் நேற்று இரவு, 8:00 மணிக்கு, உடுமலை வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மலைவாழ் மக்கள் கூறுகையில்,' வாழ்வாதாரமாக உள்ள வனப்பொருட்களை சேகரிக்கக்கூடாது, விற்பனை செய்யக்கூடாது என வனத்துறையினர் மிரட்டியதோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டுகின்றனர்.கோவிலுக்கு வரும் நிதி மற்றும் பக்தர்களை அழைத்து வரும் வாகனங்கள், கட்டண முறையில் இயங்கி வருகின்றன. இந்த நிதி மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறையை கொண்ட, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியாகவும், அரசு சார்பில் மலைவாழ் மக்கள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியும், கிராம சபை ஒப்புதல் அடிப்படையிலேயே செலவிடவேண்டும்.ஆனால், வனத்துறையினர் முறைகேடாக, மலைவாழ் மக்களிடம் கேட்காமல், முறைகேடாக நிதியை எடுத்துக்கொள்கின்றனர். இவ்வாறு, பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.வனத்துறையில் பணியாற்றும் வாட்சர் உள்ளிட்ட மலைவாழ் மக்களுக்கும் ஊதியம் வழங்குவதில்லை. இது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், மலைவாழ் மக்கள் வனப்பொருட்கள் சேகரித்து, விற்பனை செய்யும் வகையில் வாழ்வாதாரம் காக்கவும் வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
07-Mar-2025