மயிலானந்தனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்
திருப்பூர்: ஈரோடு எஸ்.கே.எம் குழுமங்களின் தலைவரும், உலக சமுதாய சேவா சங்கத் தலைவருமான மயிலானந்தனின் சமூக சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் டில்லி என்.சி.ஆர். சோனேபட்டில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலை., கவுரவ டாக்டர் பட்டம் (மதிப்புறு முனைவர்) பட்டம் வழங்கியுள்ளது. டில்லி பல்கலை வளாகத்தில் நடைபெற்ற மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் இந்திய துணை குடியரசுத்தலைவர் சி.பி,ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இப்பட்டத்தை வழங்கினார். ஹரியானா ஆளுனர் ஆசிம்குமார் கோஷ் தலைமை வகித்தார். விழாவில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை வேந்தர் ரவி பச்சமுத்து, துணைவேந்தர் பரம்ஜித், ஜஸ்வால், பதிவாளர் சாமுவேல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.