மேலும் செய்திகள்
7 கிலோ கஞ்சா பறிமுதல்; வட மாநிலத்தவர் கைது
09-Jun-2025
பல்லடம்; பல்லடம் அடுத்த மாதப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில், பொங்கலுார் மற்றும் - பல்லடம் நோக்கி வாகனங்கள் வந்து கொண்டிருக்க, திடீரென அசுர வேகத்தில் பாய்ந்து வந்த குதிரை, இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி ரோட்டில் விழுந்தது. சுதாரித்து எழுந்தபடி மீண்டும் சாலையை கடந்து சென்றது. தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பாய்ந்து குதிரையால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டது. குதிரை மோதி தடுமாறிய இருசக்கர வாகன ஓட்டி அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பினார். குதிரை, அருகிலுள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமானது என்பதும், மேய்ச்சலில் இருந்தபோது, திடீரென ரோட்டுக்கு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Jun-2025