உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மானியம் தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மானியம் தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

உடுமலை,; தென்னை மரங்களை பாதித்து வரும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, தோட்டக்கலைத்துறை சார்பில், மானிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.குடிமங்கலம் வட்டாரத்தில், 14,250 ெஹக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில், வெள்ளை ஈ தாக்குதலால், தென்னை மரங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.இந்த நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த, தற்போது தோட்டக்கலைத்துறை சார்பில் மானியத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வகுமார் கூறியிருப்பதாவது: தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தவும், சாகுபடியிலுள்ள மரங்களை வலுப்படுத்தவும், மாநில தோட்டக்கலை வளர்ச்சித்திட்டத்தின் கீழ், வெள்ளை ஈ தடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.குடிமங்கலம் வட்டாரத்தில், 7 ஆயிரம் ெஹக்டேரில் திட்டத்தை செயல்படுத்த, 1 கோடியே 24 லட்ச ரூபாய் நிதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த முறையில், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, மஞ்சள் ஒட்டும் பொறி, ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள், 50 சதவீத மானியத்தில், ெஹக்டேருக்கு, 1,775 ரூபாய் வழங்கப்பட உள்ளது.ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 2 ெஹக்டேர் வரை மானியம் வழங்கப்படும். திட்டத்தில் பயன்பெற விவசாயிகள், வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு, பெதப்பம்பட்டி உள்வட்ட விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ராஜசேகரன், 86755 56865; சங்கவி 81110 55320 என்ற மொபைல் போன் எண்ணிலும், குடிமங்கலம் உள்வட்ட விவசாயிகள், சரவணகுமார், 97891 97648; மதன் 97867 78651 என்ற மொபைல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி