உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  எவ்வளவு வேலை பாக்கியிருக்கு? தெற்கு ரயில்வே ஜி.எம். கேள்வி தெற்கு ரயில்வே ஜி.எம். ஆய்வு

 எவ்வளவு வேலை பாக்கியிருக்கு? தெற்கு ரயில்வே ஜி.எம். கேள்வி தெற்கு ரயில்வே ஜி.எம். ஆய்வு

திருப்பூர்: 'அம்ரூத் பாரத்' திட்டத்தின் கீழ், 18 கோடி ரூபாயில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தும் பணி கடந்தாண்டு துவங்கி நடந்து வருகிறது. முதல் பிளாட்பார்மில் நுழைவுவாயில், டிக்கெட் கவுன்டர், டூவீலர் ஸ்டாண்ட், கூட்ஸ்ெஷட் இடமாற்றம் உள்ளிட்ட பணிகள், 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இரண்டாவது பிளாட்பார்ம் வசதிகளை மேம்படுத்த அளவீடு செய்ததுடன், அடுத்த கட்ட பணி மெதுவாக நடக்கிறது. இந்நிலையில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், சேலம் கோட்ட மேலாளர் பன்னா லால் ஆகியோர் அடங்கிய குழுவினர், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று ஆய்வு நடத்தினர். அதில், 'அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் என்னென்ன பணி முடிந்துள்ளது; இன்னமும் எவ்வளவு வேலை பாக்கியிருக்கு? என கேள்வி எழுப்பினார். திருப்பூர் ஸ்டேஷன் மேலாளர் புரமோத்குமார், உதவி மேலாளர் கிருஷ்ணன் பண்டிட், பொறியியல் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். 'டிச. 31ம் தேதிக்குள், 90 சதவீத பணியை முடித்து, அறிக்கையளிக்க வேண்டும்,' என, பொது மேலாளர் அறிவுறுத்தி, 12 நிமிடத்தில் ஆய்வை முடித்துவிட்டு, ஈரோடு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி