உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிப்பழக்கத்தை எவ்வாறு நிறுத்தலாம்? மன நல நிபுணர்

குடிப்பழக்கத்தை எவ்வாறு நிறுத்தலாம்? மன நல நிபுணர்

குடிப்பழக்கத்தை உடனடியாக நிறுத்துவது தவறென்று பலரும் சொல்வதுண்டு; அதேபோல் குடிப்பழக்கம் தொடர்பாக அறிவியல்பூர்வமற்ற பல கருத்துகளும் உலா வருகின்றன.திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மன நலப் பிரிவு டாக்டர் தீபக், மது ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தின் ஆலோசகராகவும் உள்ளார். நம்மிடம் அவர்பகிர்ந்தவை:குடிப்பழக்கத்தில் இருந்து ஒருவர் விடுபடுவது எளிதா?'நானே குடியை நிறுத்தி விடுகிறேன்; இனி, குடிக்க மாட்டேன்' என்பதெல்லாம், மருந்து சாப்பிடாமல் இருக்க, குடிப்பவர்கள் தற்காலிகமாக தள்ளிபோடும் சமாதானங்கள்.மருந்தே சாப்பிடாமல் குடியை நிறுத்தலாம். ஆனால், அது ஆரம்பநிலையாக இருக்க வேண்டும். அதே நேரம், நீண்ட நாள் பழக்கம் உடையவர்கள், மாத்திரை உட்கொண்டால்தான் குடியை முழுமையாக விட முடியும்.குடியை பொறுத்தவரை நமக்கு உடல் ரீதியாக பிரச்னை உள்ளது என்பதை புரிந்து கொள்பவர்கள்; மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்வார்கள். மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட மற்றவர்களுக்கும் உதவி செய்வார்கள்.தினமும் குடிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களை உடனே மாற்றுவது, சற்று கடினம் தான்; மாற்ற முடியாது என்பதல்ல. ஒரு மாதம் முழுதும் குடிக்காமல், ஒரே நாளில் முழுமையாக குடித்து, உடலை வீணாக்கி கொள்பவர் உண்டு.குடிபோதை மீட்பு மையங்களில் போலி மையங்களைக் கண்டறிவது எப்படி?ஒரு மாதிரியான விதிமுறை தான். சென்னை, கிண்டியில் உள்ள தமிழக அரசின் மாநில மன நல அமைப்பில் பதிவு செய்து, அங்கீகாரம் பெறுபவர் மட்டுமே குடி மற்றும் போதை மறுவாழ்வு மையம் திறக்க முடியும். அங்கு ஒரு மனநல நிபுணர் அடிக்கடி 'விசிட்' செய்ய வேண்டும்.அங்குள்ளவர் உடல்நிலையை அவ்வப்போது கண்காணிக்க, ஒரு டாக்டர், செவிலியர் எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகள் கட்டாயம் இருக்க வேண்டும்.ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக புதுப்பிப்பு சான்றிதழ் பெற வேண்டும். மருத்துவ அறிவியல் ரீதியாக குணப்படுத்த வழிமுறைகள் உண்டு. அதைத் துவக்கம் முதல் குணமாகும் வரை சரிவர பின்பற்றினால், நோயாளி ஒத்துழைத்தால் சாத்தியம் தான்.கட்டுக்கதைகேள்வி: குடிப்பழக்கத்தை திடீரென நிறுத்தினால் என்னென்ன உடல் ரீதியான விளைவுகள் நேரிடும்?டாக்டர் தீபக்: குடிப்பழக்கத்தை தொடர்வதால் தான் பாதிப்பு அதிகமாகுமே தவிர, நிறுத்துவதால் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு வேளை ஒருவர் குடியை நிறுத்தியவுடன், படபடப்பு, பதற்றம், துாக்கமின்மை, கவலை உள்ளிட்டவை உருவாகலாம். இதை மாத்திரை, மருந்து மூலம் சரிசெய்து கொள்ளலாம். குடியை ஒரு நாளில் நிறுத்தக்கூடாது; கொஞ்சம் கொஞ்சமாகத் தான் நிறுத்த வேண்டும் என்பதெல்லாம் கட்டுக்கதை.குடிப்பழக்கம் எப்போதுமே பாதிப்பு தான்; அதை உடனடியாக நிறுத்துவது தான் நல்லது; டாக்டரை சந்தித்து, மருத்துவ ஆலோசனை பெற்று, மதுவை நிறுத்து இன்னமும் நல்லது; பக்கவிளைவுகள் எதுவும் இருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ