மதுக்கடைக்கு எதிராக மனித சங்கிலி
திருப்பூர்; திருப்பூர், எஸ்.ஆர்., நகர் பகுதியில் மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்றக்கோரி இப்பகுதியினர் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்போர் நல சங்க மகாசபை கூட்டம், குமரன் கல்லுாரி மைதானத்தில் நடந்தது.சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். குறிப்பாக, நொய்யல் கரையோர ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மதுக்கடை (1925) நிரந்தரமாக அகற்றப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.அதன்படி, தமிழக முதல்வரின் திருப்பூர் வருகையை முன்னிட்டு, முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில், மனித சங்கிலி போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது.