வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது போன்று நடக்கக் கூடாது என்றுதான் .......
மேலும் செய்திகள்
4 குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்
20-Apr-2025
திருப்பூர்:திருப்பூரில், மனைவியை கல்லால் அடித்து முகத்தை சிதைத்து கொலை செய்த கணவரை, மதுரையில் போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பூம்புகார் நகர் குடியிருப்பில், காலி இடத்தில் நேற்று இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கே.வி.ஆர்., நகர் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றினர்.இறந்த பெண்ணின் தலை மற்றும் கைகளில் கற்களால் அடித்து முகம் சிதைக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். கொலையான பெண் அணிந்திருந்த சேலையை வைத்து, அவர் மருத்துவமனையில் பணியாற்றுவது தெரிந்தது. அப்பெண் குறித்து மருத்துவமனை வட்டாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.போலீசார் கூறியதாவது:கொலை செய்யப்பட்ட பெண், மதுரை, வாடிப்பட்டியை சேர்ந்த சித்ரா, 27. இவர், 10 ஆண்டுகளுக்கு முன், ராஜேஷ் கண்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.தம்பதிக்கு 9 வயது மகள், 2 வயதில் மகன் உள்ளனர். குழந்தைகள் இருவரும் மதுரையில் படிக்கின்றனர். தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. மனைவி நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டார்.கருத்து வேறுபாடு காரணமாக, ஒன்றரை மாதம் முன், திருப்பூர் வந்த அவர், தாய் சீதாலட்சுமியுடன் வாடகை வீட்டில் வசித்தார். ஒரு மாதமாக அதே பகுதியில் உள்ள பல் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். ஒரு வாரம்முன் வீட்டுக்கு வந்த ராஜேஷ்கண்ணன், மனைவியை மதுரைக்கு வருமாறு அழைத்தார். அவர் வர மறுத்தார். இந்த ஆத்திரத்தில் ராஜேஷ் கண்ணன் கொலை செய்துள்ளார்.இவ்வாறு கூறினர்.இந்நிலையில், மதுரையில் பதுங்கியிருந்த ராஜேஷ் கண்ணனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இது போன்று நடக்கக் கூடாது என்றுதான் .......
20-Apr-2025