உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இடுவாய் விஸ்டம் பள்ளி மாணவர்கள் அசத்தல்

இடுவாய் விஸ்டம் பள்ளி மாணவர்கள் அசத்தல்

திருப்பூர், : இடுவாய் விஸ்டம் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அபார சாதனை படைத்துள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவி சுவேதா, 500க்கு, 495 மதிப்பெண்களும், மாணவர் தர்மசபரீஷ், 500க்கு 482 மதிப்பெண்களும், மாணவி ஸ்ரீநிகா, 500க்கு 477 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவி பிரகதி, 600க்கு 571 மதிப்பெண்களும், மாணவி ரித்திகா, 600க்கு 559 மதிப்பெண்களும், மாணவர் மாதேஷ் 600க்கு 558 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.பள்ளி நிர்வாகம், மாணவர்களின் விடாமுயற்சி மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, பெற்றோரின் உற்சாக ஆதரவு ஆகியவற்றால், பள்ளி மாணவர்கள் அபார வெற்றியை ஈட்டியுள்ளதாக, பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.பள்ளியின் தாளாளர் முத்துக்குமாரசாமி, முதல்வர் மனோன்மணி, துணை முதல்வர் அபிநயா, செயலாளர் வேலவேந்தன் ஆகியோர், சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு, பெற்றோர்கள் முன்னிலையில் கேடயம் வழங்கி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !