மேலும் செய்திகள்
ஆடாதொடா, நொச்சி நாற்றுகள் இன்று முதல் வினியோகம்
14-Oct-2025
பல்லடம்: ''தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே ஆனைமலையாறு- - நல்லாறு திட்டம் நிறைவேறும்,'' என, உ.உ.க., மாநிலத்தலைவர் செல்லமுத்து கூறினார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் அவர் அளித்த பேட்டி: அரசியல் அதி காரம் இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்ற நிலை இன்று உள்ளது. தமிழகத்தில், இன்றுள்ள ஆட்சி நிர்வாகம், விவசாயிகளைப் பற்றி சிந்திப்பதே இல்லை. கோவில்களில் முளைப்பாலிகை வளர்ப்பது போல், மழையால் நனைந்த நெல் மூட்டைகளில் நெற்பயிர்கள் முளை விட்டதை சமீபத்தில் பார்த்தோம். விவசாயிகள் ரத்தம் சிந்தி விளைவித்த நெற் பயிர்களை பாதுகாக்க இந்த அரசுக்கு திராணி இல்லை. ஆனால், 6 ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகளில், மது பாட்டில்களை பத்திரமாக அடுக்கி வைக்க குடோன் கட்டுகின்றனர். விவசாயிகளைப் பற்றி சிந்திக்கவே ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை. அனைத்து துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. தென்னை, நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும். நதிகள் இணைக்கப்பட வேண்டும்; குளங்கள் துார்வாரப்பட வேண்டும். ஆறுகள் சீர்திருத்தப்பட வேண்டும். இதையெல்லாம் யார் செய்வார்களோ? அவர்களை ஆட்சியில் அமர வைக்க முயற்சிக்க வேண்டும். முதியோர் உதவி, மகளிர் உரிமை, இலவச பஸ், உங்களுடன் ஸ்டாலின், எங்களுடன் ஸ்டாலின் என, திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறது இந்த அரசு. இந்த ஆட்சியின் அவலங்களை மக்கள் சகிக்க முடியாமல் பொறுத்துக் கொண்டுள்ளனர். அத்திக்கடவு- - அவிநாசி திட்டம் எப்படி நிறைவேற்றப்பட்டதோ அதுபோல், ஆனைமலையாறு- - நல்லாறு திட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
14-Oct-2025