உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓலைப் பந்தலுடன் தொட்டி குழாயை திருகினால் காற்று

ஓலைப் பந்தலுடன் தொட்டி குழாயை திருகினால் காற்று

திருப்பூர்; கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் உயரமாக மேடை அமைப்பு ஏற்படுத்தி அதில் குடிநீர் நிரப்பி வைக்கப்படுகிறது.இங்கு பொதுமக்கள் தங்கள் தாகத்தை போக்கும் வகையில் குடிநீர் பிடித்து பருக வசதியாக 'டேப்' பொருத்தியும், டம்ளர் வைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் 500 லி., கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் டேப் பொருத்தி பொதுமக்கள் குடிநீர் பிடித்து பருகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கடும் வெயில் காணப்படுவதால், பிளாஸ்டிக் தொட்டியில் உள்ள குடிநீர் சூடாகி விடாமல் பாதுகாக்கும் வகையில், இதைச்சுற்றிலும் தென்னை ஓலை தடுப்பும், மேற்பகுதியில் பந்தலும் வேயப்பட்டுள்ளது.குளுமையான வகையில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதால், குடிநீர் குளுகுளுவென இருக்கும் என்று நினைத்து பஸ் பயணிகள் அங்கு சென்று குழாயைத் திருகினால் வெறும் காற்று தான் வெளி வருகிறது.உரிய வகையில் இது போல் அமைக்கப்படும் தண்ணீர் பந்தல் தொட்டிகளை கண்காணித்து உடனுக்குடன் குடிநீர் நிரப்பும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயரளவுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து விட்டு குடிக்க தண்ணீர் இல்லாமல் இருந்தால் எந்த பயனும் இல்லை.குடிநீர் தொட்டி அமைந்துள்ள தண்ணீர் பந்தலைச் சுற்றிலும் மூட்டை மூட்டையாக குப்பை கழிவுகள் கொண்டு வந்து வைத்துள்ளனர்.பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சேகரமாகும் குப்பை கழிவுகளை மூட்டையாக கட்டி இதைச் சுற்றிலும் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ