உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டுரைப் போட்டியில் வென்றால் பிரதமர் மோடியை சந்திக்கலாம்

கட்டுரைப் போட்டியில் வென்றால் பிரதமர் மோடியை சந்திக்கலாம்

திருப்பூர் ; மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்க பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், 'வளரும் பாரதத்தில் இளம் தலைவர்களின் உரையாடல்' என்ற போட்டி நடத்தப்படுகிறது. 'வரும், 2047ல், வளர்ச்சியடைந்த இந்தியா எப்படி இருக்க வேண்டும்' என்பது குறித்து நாடு முழுதும் உள்ள இளைஞர்கள் தங்கள் யோசனைகள், திட்டங்கள், கருத்துக்களை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரசு, தனியார் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர், கல்லுாரி மாணவ, மாணவியர், இளைஞர்கள் உட்பட, 15 முதல், 29 வயதுடையவர்கள் இதில் பங்கேற்கலாம். ஆன்லைன் முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் https://mybharat.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ளது.போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள், மாநில, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகிறவர்கள், டில்லியில் நடக்கும் போட்டியில் பங்கேற்க முடியும். தேசிய போட்டியில் வெற்றி பெறுபவர் ஜன., 12 ல் நடக்கும் இளைஞர் தின விழா பங்கேற்று, பிரதமர் மோடியை சந்திக்க முடியும். மேலும் விபரங்களை, https://mybharat.gov.in/ என்ற இணையதளம் அல்லது 1800 212 2729 என்ற எண்ணில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ