உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்; பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர்

கோவில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்; பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர்

உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கந்த சஷ்டி விழா துவங்கியது.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், முருகன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், கந்த சஷ்டி, சூரசம்ஹார விழா நேற்றுமுன்தினம், துவங்கியது. மாலை, 6:30 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து யாக சாலை பூஜைகள் துவங்கியதோடு, பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.கந்த சஷ்டி விழாவில், தினமும், காலை, மாலை நேரங்களில், யாக சாலை பூஜைகள், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. வரும், 7ம் தேதி, மதியம், 3:15 மணிக்கு, சுவாமி புறப்பாடும், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.8ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, வள்ளி, தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலையில் வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது.* மடத்துக்குளம் அருகேயுள்ள, பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், சூரசம்ஹார பெரு விழா, மங்கள இசையுடன் துவங்கியது.தொடர்ந்து, விக்னேஸ்வரபூஜை, சங்கல்பம், புண்யாவாகம், கலா ஆவாஹனம், சுப்ரமணியர் மாலா மந்திர ஹோமம், அலங்கார பூஜை, கங்கணம் கட்டுதல், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.விழாவில், தினமும் சுவாமிக்கு பல்வேறு பூஜைகள், இரவு, ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி திருவீதி நடக்கிறது. வரும், 7ம் தேதி, காலை, சிறப்பு அபிேஷகம், படையல் நிவேதனம், அகத்திக்கீரையுடன் குளித்தளிகை படையல் நிவேதனம், மாலை, 4:00 மணிக்கு, முருகன் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளல், சூரனை வதம் செய்தல், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது.8ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு, திருமண சீர்வரிசை ஊர்வலம், இரவு, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே அம்மணீஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டித்திருவிழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பொள்ளாச்சி அருகே அம்மணீஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டித் திருவிழா கடந்த, 2ல் கொடியேற்றம் மற்றும் காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, கணபதி வேள்வி அபிேஷகம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.நேற்றும், காலை, 6:00 மணிக்கு கணபதி வேள்வி, காலை, 7:00 மணிக்கு அபிேஷகம், மாலை, 8:00 மணிக்கு தீபாராதனை நடத்தப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வரும், 6ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, மாரியம்மன் கோவிலில், அம்மனிடம் முருகப்பெருமான் சக்திவேல் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு, ஊர் மைதானத்தில் சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.அன்றைய தினம் இரவு, 8:00 மணிக்கு மகா அபிேஷகம், இரவு, 9:00 மணிக்கு மகா தீபாராதனையும் இடம்பெறுகிறது.வரும், 8ம் தேதி, காலை, 9:15 மணிக்கு திருக்கல்யாணம், காலை, 11:00 மணிக்கு சிறப்பு அலங்காரம்; மதியம், 12:00 மணிக்கு அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடத்தப்படுகிறது. - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை