மாடு வரத்து உயர்வு
திருப்பூர் அமராவதிபாளையத்தில், திங்கள்தோறும் கால்நடை சந்தை நடக்கிறது. இச்சந்தைக்கு, 928 கால்நடைகள் வந்தன. கன்றுக்குட்டி, 2,500 - 4,500 ரூபாய். காளை, 24 ஆயிரம் - 27 ஆயிரம் ரூபாய். எருமை 30 ஆயிரம் - 33 ஆயிரம், பசு மாடு, 25 ஆயிரம் - 29 ஆயிரம் விலைக்கு விற்கப்பட்டது.'கடந்த டிச., மாதத்துக்கு பின் தற்போது தான் கால்நடை வரத்து, 900த்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் விசேஷங்கள் எதுவும் இல்லாத நிலையில், மாடு வரத்து திடீரென உயர்ந்துள்ளது. மாடு வரத்து அதிகரிப்பால், 1.95 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது,' என, மாட்டுச்சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -