உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 25 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட சொத்து வரி

25 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட சொத்து வரி

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 2022-23ம் நிதியாண்டு முதல் உயர்த்தப்பட்ட சொத்து வரி விவரம்:* கட்டடங்கள்:600 சதுர அடி வரை உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம்; 1,200 சதுர அடி வரையிலான வீடுகளுக்கு 50 சதவீதம்; 1,800 சதுர அடி வரை 75 சதவீதம்; 1800 சதுர அடிக்கும் மேல் வீடுகளுக்கு 100 சதவீதம்; வணிக நிறுவனங்களுக்கான சொத்து வரி 100 சதவீதம்; தொழிற்சாலைகள் மற்றும் சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கு 75 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டு, கடந்த இரு ஆண்டுகளாக இந்த வரி வசூலிக்கப்படுகிறது. காலியிடங்களுக்கான வரியில், மண்டல வாரியாக உள்ள காலியிட வரியில் 100 சதவீதம் உயர்த்தப்பட்டது.இது தற்போது நடப்பு நிதியாண்டு இரண்டாவது அரையாண்டில் 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் முதல் மற்றும் இரண்டாவது அரையாண்டு துவங்கி முதல் மாதத்துக்குள் செலுத்தப்படும் வரிகளுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை அறிவித்து வழங்கி வருகிறது. அதை அப்போது செலுத்தாமல் அதன் பின் செலுத்தினால் வரிக்கு ஒரு சதவீதம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்த நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. இது வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2022 ஏப்., மாதம் இந்த வரி உயர்வு குறித்து சிறப்பு கூட்டம் நடத்தி அதற்கான தீர்மானம், திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.அக்கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் சொத்து வரி உயர்வு குறித்து பேசியதாவது:உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு காரணிகளை ஆராய்ந்து, செலவினம், பொருளாதார குறியீடு உயர்வு, மாநகராட்சியின் நிதித்தேவை, அடிப்படை வசதிகள் மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சொத்துவரி உயர்வு அவசியமாகிறது. மேலும் நிர்வாகம் பல நுாறு கோடி ரூபாய் கடனில் உள்ளது.நகரின் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளுதல், அலுவலர் சம்பளம் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்து வருகிறது. அதனடிப்படையில், இந்த சொத்து வரி உயர்வு என்பது கட்டாயமாகிறது.இவ்வாறு அவர் பேசினார்.சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கவுன்சிலர்களும், இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்; வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்று தி.மு.க., கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் பேசினர். கடும் அமளிக்கு இடையே அந்த தீர்மானம் தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.-----------* அந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:* அன்பகம் திருப்பதி - அ.தி.மு.க.,;ஏற்கனவே வரி உயர்வு குறித்து சீராய்வு கமிட்டில அமைத்து, கால அவகாசம் வழங்க வேண்டும். தீர்மானம் மீது விவாதம் நடத்தி, கவுன்சிலர் ஓட்டெடுப்பு மூலம் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வரி உயர்வு ரத்து செய்யப்பட வேண்டும். கடும் கண்டனத்துக்குரியது.* குணசேகரன் - பா.ஜ.,:மத்திய அரசு மீது பழி போட்டு மாநில அரசு இந்த வரி உயர்வை மக்கள் மீது சுமத்துவது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு கட்டாயம் வரி உயர்த்த வேண்டும் எனக் கூறியதற்கான ஆதாரம் காட்ட வேண்டும். திருப்பூர் நிலையைக் கருதி வரி உயர்வு திரும்ப பெற வேண்டும். மாநில அரசுக்கு இது கடும் அவப் பெயரை ஏற்படுத்தும்.* நாகராஜ், ம.தி.மு.க.,;மத்திய அரசு நிதி இல்லை என்கிறது. மாநில அரசிடம் நிதி இல்லை. இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் நிதி இன்றி தடுமாறுகிறது. ஆனால், அதே சமயம் அதிக வரி என்பது ஏற்புடையதில்லை. வரிகளை குறைக்க வேண்டும்.* செந்தில்குமார், காங்.,:கடந்த 2018 ல் அமைத்த கமிட்டி வரி உயர்த்தியது. ஆனால் பின்னர் குறைக்கப்பட்டது. வரி உயர்த்தாமல் எதுவும் செய்ய இயலாது. ஆனால் தற்போதைய அசாதாரண நிலை சரியான பின்னர், சீராய்வு கமிட்டி மூலம் ஆலோசித்து கருத்து கேட்டு, வரியை குறைத்து, பின் முடிவு ெசய்யலாம்.* செல்வராஜ், இ.கம்யூ., :வரி உயர்வு குறித்து தேர்வு செய்த உள்ளாட்சி அமைப்புகள் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் மாநில அரசு தலையிடுவது தவறாஜன முன்னுதாரணம். உள்ளாட்சி அமைப்பின் ஜனநாயகத்தை தகர்க்கிற இந்த செயலை கடுமையாக கண்டிக்கிறோம். இந்த வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்.* மணிமேகலை, மா.கம்யூ.,:வரியினம் தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே உள்ளது. இதில் மாநில அரசு தலையிடுவது, மன்றத்தில் அதிகாரத்தைப் பறிக்கும் செயல். அரசு வரியை உயர்த்தி விட்டு, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கூறுவது கண்துடைப்பு. உரிய விதிமுறைகளின் படி, குறைந்த பட்ச வரி குறித்து சீராய்வு செய்ய வேண்டும். இந்த வரி உயர்வு திரும்ப பெற வேண்டும்.* பாத்திமா தஸ்லின். ஐ.யு.எம்.எல்.:வரி உயர்வு சரியான முடிவில்லை. சொந்த வீடு என்றாலும் பலரும் வாடகைக்கு விட்டுள்ளனர். விலைவாசி உயர்வு போன்ற நெருக்கடியில் இது மேலும் அதிக சுமை ஏற்படுத்தும். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு வரி குறித்து சீராய்வு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Uma
டிச 02, 2024 19:26

மக்களை கொடுமை படுத்துகிறார்கள் சம்பாதிப்பது எல்லாம் வரியா கட்டி விடலாமா?


Uma
டிச 02, 2024 19:21

Please reduce the abnormal tax


Uma
டிச 02, 2024 19:20

Please reduce property tax for shops at salem very abnormal


V GOPALAN
டிச 02, 2024 08:57

இந்த சென்னையில் ஒரே அளவுள்ள அபார்ட்மெண்டுகல்லுக்கு இந்த கேடு கேட்ட அரசு வெவேறு சொத்து வரிகளை போட்டுள்ளது. சி ம் செல்லுக்கு இதை தெரிவித்தால் ஆய்வுக்கு அனுப்பாம ல் எல்லாம் சரியாக உள்ளது என்று முன்னாள் பேடி பேடி தெரிவிக்கிறார் . இவர் ஒரு லக்ஷம் மனுக்களை வாங்கி மறைந்து விட்டார்


raja
டிச 02, 2024 02:58

இதுதாண்டா திராவிட மாடல்... எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை