மேலும் செய்திகள்
இந்திய கம்யூ., நகர குழு மாநாடு
05-Jun-2025
அவிநாசி; இந்திய கம்யூ., கட்சியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூர் புறநகர் மாவட்ட இந்திய கம்யூ., கட்சி சார்பில் இரண்டாவது மாநாடு வரும் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் அவிநாசி குலாலர் திருமண மண்டபத்தில் நடக்கிறது.வரும் 22ம் தேதி காலை 10:00 மணிக்கு மாநாடு துவங்குகிறது.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பேரணி துவங்கி, செங்காடு வ.உ.சி., மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.மாநிலச் செயலாளர் முத்தரசன், எம்.பி., சுப்பராயன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வகிதா நிஜாம், ரவி, திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் இஷாக், துணைச் செயலாளர்கள் மோகன், ரவி, பொருளாளர் பழனிசாமி, மாவட்ட மாதர் சங்க செயலாளர் நதியா உள்ளிட்டோர் பேசுகின்றனர்.மாநாடு தயாரிப்பு பேரவை கூட்டம் குலாலர் திருமண மண்டபத்தில் மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் ஷாஜகான் தலைமையில் நடந்தது.
05-Jun-2025