உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தல்

தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தல்

உடுமலை; தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடகப்பிரிவு தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும்; ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும்; கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்; சத்துணவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். நான்கு மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கப்படும் என்ற அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உட்பட, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள் சட்டசபையில் ஓங்கி ஒலித்தால் மட்டுமே, தமிழக அரசு, கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும்.இவ்வாறு, ஈஸ்வரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை