உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றம்

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றம்

உடுமலை; ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், கோடந்துார் மலைவாழ் மக்கள் விவசாயம் மேற்கொள்ளும் வகையில், தரிசு நிலங்கள் துாய்மைப்படுத்தும் பணி நடக்கிறது.கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேளாண் துறை சார்பில், உடுமலை வட்டாரத்தில், நடப்பாண்டு தேவனுார் புதுார், மானுப்பட்டி, பெரியபாப்பனுாத்து, ராகல்பாவி, ராவணாபுரம், பெரிய கோட்டை, போடிபட்டி ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதில், தரிசு நிலங்களை சாகுபடிக்கு உகந்த நிலமாக மாற்றும் வகையில், திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், புதர் மண்டி காணப்படும் தனி நபர்களுக்கு சொந்தமான நிலங்களில் புதர்கள் அகற்றப்பட்டு, வேளாண் நிலமாக மாற்றி, உழவு மேற்கொள்ளப்பட்டு, விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட, மானுப்பட்டி கிராமம், கோடந்துார் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கிய நிலத்தில், சாகுபடி மேற்கொள்ளும் வகையில், 55 ஏக்கர் நிலம், துாய்மைப்படுத்தப்பட்டு, உழவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இங்கு, மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளும் வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதனை, உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி, வேளாண் அலுவலர் அமல்ராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இதே போல், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், தரிசாக இருக்கும் நிலங்களை வேளாண் நிலங்களாக இத்திட்டத்தின் கீழ் மாற்றிக்கொள்ளலாம், என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை