மேலும் செய்திகள்
புதிய பண்டுகளில் திரண்ட முதலீடு ரூ.1 லட்சம் கோடி
20-Dec-2024
திருப்பூர் ; திருப்பூர் ஐ அண்ட் எம் மார்க்கெட்டிங் நிறுவனம், விலை குறைவான, ஓவல் பிரின்டிங் மெஷின்களை அறிமுகப்படுத்தியுள்ளது.திருப்பூர், காந்தி நகர், ஆஷர் நகர் பகுதியில் செயல்படும் ஐ அண்ட் எம் மார்க்கெட்டிங் நிறுவனத்தினர் கூறியதாவது:எங்கள் நிறுவனம் 20 ஆண்டுகளாக, பிரின்டிங் மெஷின் விற்பனை மற்றும் சேவைகளை தரமாக வழங்கி, வாடிக்கையாளர் நன்மதிப்பை பெற்றுள்ளது. தனித்துவமான மெஷின்களை இந்தியாவிலேயே திருப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டிக்கர் பிரின்டிங் மெஷின், கண்ணாடி டேபிள், அதிக உற்பத்தி தரும் ஆசிய நாடுகளில் ஓவல் பிரின்டிங் என எங்கள் நிறுவனம் ஏராளமான மெஷின்களை அறிமுகப்படுத்தியுள்ளது.எங்கள் அடுத்த மைல்கல்லாக, மிகவும் குறைந்த விலையில் 21 லட்சம் முதல், ஓவல் பிரின்டிங் மெஷின்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மேனுவல் மெஷின் பயன்படுத்துவோரின் அடுத்தகட்ட நகர்வாக அமையும்.அனைத்து பிரின்டிங் சாம்பிள், உள்ளூர் உற்பத்தியாளர்கள், சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான ஏற்றுமதியாளர் மற்றும் வர்த்தகர்களுக்கு உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
20-Dec-2024