உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பெண்கள் பள்ளி நுழைவாயிலில் தள்ளுவண்டி கடை தேவையா?

 பெண்கள் பள்ளி நுழைவாயிலில் தள்ளுவண்டி கடை தேவையா?

அவிநாசி: அவிநாசியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் தள்ளுவண்டி அமைக்கப்பட்டுள்ளதற்கு, பெற்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் செயல்பட்டு வருகிறது. இதில், 900 மாணவியர் படிக்கின்றனர். பள்ளியின் நுழைவாயிலில் சாலையோர தள்ளுவண்டி கடைசில நாட்களாக செயல்பட்டு வருகிறது. அதில் மக்காச்சோளம், நிலக்கடலை ஆகிய தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை வேகவைக்க தள்ளுவண்டியின் பக்கவாட்டில் வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் வைத்து அடுப்பு எரிக்கின்றனர். அதேயிடத்தில், பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். பள்ளி நுழைவாயில் என்பதால், மாணவியரின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவ்வளவு மக்கள் நடமாட்டம் மற்றும் மாணவியர் படிக்கும் பள்ளி நுழைவு பகுதி முன்பு எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவதை எவ்வாறு பள்ளி நிர்வாகம் அனுமதித்தது என பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, சர்ச்சைக்குரிய தள்ளுவண்டி உட்பட எந்தவொரு கடைகளையும் பள்ளிக்கு முன் அனுமதிக்க கூடாது என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ