| ADDED : டிச 25, 2025 05:50 AM
திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, என்.எஸ்.எஸ். அலகு - 2 சார்பில் கருமாபாளையத்தில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்று, பறவைகள் கணக்கீடு நடந்தது. அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம் பேசினார். திருப்பூர் இயற்கைக் கழக தலைவர் ரவீந்திரன் காமாட்சி பேசுகையில் பறவைகள் இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது. இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். பறவைகளை அவற்றின் தோற்றம், சத்தம், நிறம், இறகு, அலகு, அமைப்பு போன்றவற்றை கொண்டு வகைப்படுத்தலாம். அயல்நாட்டு பறவைகள் பருவகால மாற்றத்தாலும், உணவு மற்றும் இருப்பிடத்திற்காக வேறு நாட்டுக்கு வலசை வருகின்றன. பறவைகள் பூச்சிகளை கட்டுப்படுத்தி விளைச்சலை அதிகரிக்கின்றன. டோடோ போன்ற அழிந்த பறவைகள், பார் கழுகு போன்ற அழியும் நிலை பறவைகள், உள்ளூர் பறவைகள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். என்று பேசினார்.கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், ஏற்பாடுகளை செய்தார். --- சிக்கண்ணா கல்லுாரி மாணவ, மாணவியர், கருமாபாளையத்தில் வலம்வந்த பறவைகளை கணக்கிட்டனர். வலசை வந்த பறவைகள் மாணவ, மாணவியர் 37 வகை பறவையினங்களை கணக்கிட்டனர். இதில் சூரை மாரி, சைபீரிய மரக்கதிர் குருவி, பிளைத் நாணல் கதிர்க்குருவி ஆகிய மூன்று வலசை வரும் பறவைகள் கண்டறியப்பட்டன.