மேலும் செய்திகள்
மக்களிடம் மனு பெற்றார் துணை முதல்வர்
20-Dec-2024
திருப்பூர்; பட்டா, ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகள் கேட்டும், பண்ணை குட்டை அமைக்க விவசாயிகளுக்கு இடையூறு கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களும், விவசாயிகளும் குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். பல்வேறு பிரச்னைகளை குறிப்பிட்டு, பொதுமக்களிடமிருந்து, மொத்தம், 328 மனுக்கள் பெறப்பட்டன.பல்லடம், அறிவொளி நகர் மக்கள்:அறிவொளி நகர் நரிக்குறவர் காலனியில், 30 குடும்பங்கள், 30 ஆண்டுகளுக்கும் மேல் வசித்துவருகிறோம். இங்கேயே பிறந்து, வளர்ந்து, திருமணம் முடித்து வாழ்ந்துவரும் எங்களுக்கு, ஆதார், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஏதுமில்லை.பலமுறை விண்ணப்பித்தும், எந்த பயனுமில்லை. எவ்வித அங்கீ காரமும் அளிக்காமல், அரசு அதிகாரிகள் எங்களை தொடர்ந்து புறக்கணித்துவருகின்றனர். இதனால், எங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. உடனடியாக ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை வழங்கி, நரிக்குறவர் இன மக்களின் பாதுகாப்பை கலெக்டர் உறுதிப்படுத்தவேண்டும்.கண்டியன் கோவில் பகுதி மக்கள்:கண்டியன் கோவில் ஊராட்சி, தாயம்பாளையத்தில், 65க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள், பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம். பி.ஏ.பி., பாசன திட்டம் வந்தபின், தரிசாக இருந்த நிலங்களை, விவசாய நிலமாக மாற்றியுள்ளனர்.எங்கள் குடியிருப்புகள், விவசாய நிலங்களிலிருந்து, 2 கி.மீ., தொலைவில் இருந்ததால், வீடுகளை காலி செய்துவிட்டு, தோட்டங்களில் குடியேறிவிட்டோம்.மூவர் கொலை சம்பவத்துக்குப்பின், தோட்டத்து வீடுகளில் வசிக்க பெண்கள் மிகவும் பயப்படுகின்றனர். ஏற்கனவே வசித்த பகுதிகளுக்கே திரும்ப முடிவு செய்துள்ளோம். எனவே, அப்பகுதிக்கு பட்டா வழங்கி, எங்களை பாதுகாக்க வேண்டும்.இடைநிலை ஆசிரியர்கள்:கடந்த 2024, ஜூலை மாதம் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் தேர்வை, தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினோம்.12 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள, 2786 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மட்டுமே மறு நியமன தேர்வு மூலம் நிரப்பப்படும் என அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.கடந்த 12 ஆண்டு கால காத்திருப்பின் பயனாக, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து, நியமன தேர்வு எழுதியவர்களின் தகுதியான அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.கட்சி சார்பற்ற விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் காளிமுத்து:தாராபுரத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பண்ணை குட்டை அமைத்து வருகின்றனர். பண்ணை குட்டைக்கு எடுக்கும் மண்ணை, அதே இடத்திலேயே கொட்டி வருகின்றனர்.இந்நிலையில், வருவாய்த்துறையினர், அபராதம் விதித்து, பண்ணை குட்டை அமைக்க விடாமல் தடுப்பது விவசாயிகளை அதிர்ச்சி அடையச் செய்கிறது. பண்ணை குட்டை அமைக்கும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும்.
20-Dec-2024