மல்லிகை கிலோ ரூ.3,200
திருப்பூர்: இன்றும், நாளையும் தை மாத வளர்பிறை முகூர்த்தம் என்பதால், பூக்களின் விலை உயர்ந்தது. பூக்களை வாங்க மொத்த வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால், பூ மார்க்கெட் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது.குளிர் காலம் துவங்கியது முதல் பூக்களின் வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று, ஒரு டன்னுக்கும் குறைவாகவே மல்லிகை பூக்கள் வந்தன. 250 கிராம் 800 ரூபாய்க்கும், கிலோ 3,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மல்லிகை பூ விலையை கேட்டதும், பூ வாங்க வந்த பெண்கள் பலரும் ஒதுங்கி நின்றனர்.பூ வாங்கி கட்டினாலும், விற்கும் விலைக்கு ஒரு முழம், 200 ரூபாய்க்கு விற்க வேண்டி வரும் என்பதால், மொத்த வியாபாரிகள் குறைவாகவே பூக்களைக் கொள்முதல் செய்ய மார்க்கெட் வந்திருந்தனர். பூ விலை உயர்வால், பூ மார்க்கெட்டில் வழக்கத்தை விட கூட்டம் குறைவாக இருந்தது. முல்லை கிலோ - 2,500 காக்கடா பூ - 1,000, செவ்வந்தி - 300, அரளி - 250 ரூபாய்க்கு விற்பனையானது.