உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜே.இ.இ. உறைவிடப்பயிற்சி முகாம்

ஜே.இ.இ. உறைவிடப்பயிற்சி முகாம்

திருப்பூர்: கடலுாரில் ஒரு மாதம் நடக்கும் ஜே.இ.இ. தேர்வுக்கான மாநில உண்டு உறைவிட பயிற்சி முகாமில், திருப்பூரில் இருந்து ஆறு மாணவியர் பங்கேற்றுள்ளனர். அகில இந்திய பொறியியல் நுழைவுத்தேர்வான ஜே.இ.இ.க்கு அரசு பள்ளி மாணவ, மாணவியரை தயார்படுத்தும் நோக்கில், வெற்றி பள்ளிகள் திட்டம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளஸ் 2 மாணவருக்கு நுழைவுத்தேர்வுக்கு, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2026ல் நடக்கும் ஜே.இ.இ. தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்த, பயிற்சி முகாமை பள்ளி கல்வித்துறை நடத்துகிறது. வெற்றி பள்ளிகள் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, வரும், ஜன. 28 ம் தேதி வரை சிறப்பு உண்டு உறைவிடப் மாநில பயிற்சி முகாம் கடலுாரில் நேற்று முன்தினம் துவங்கியுள்ளது. இதில் பங்கேற்க தமிழகம் முழுதும் இருந்து, 81 மாணவர், 219 மாணவியர் உட்பட, 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, ஆறு மாணவியர் தேர்வாகியுள்ளனர். ஜெய்வாபாய், புதுராம கிருஷ்ணாபுரம், பழனியம்மாள், அவிநாசி அரசு பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து தலா ஒருவர், வீரபாண்டி பள்ளியில் இருந்து இருவர் என மொத்தம் ஆறு மாணவியர் ஜே.இ.இ. உண்டு உறைவிட மாநில பயிற்சி முகாமுக்கு சென்றுள்ளனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண், ஏற்கனவே நடந்த பயற்சி வகுப்புகளில், அவர்களின் பங்கேற்பு பதிவேடுகளின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி