உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகை மதிப்பீட்டாளர் பயிற்சி; 24ம் தேதி முதல் அட்மிஷன்

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி; 24ம் தேதி முதல் அட்மிஷன்

திருப்பூர்; திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கை:தாராபுரம் சின்னக்கடை வீதியில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், திருப்பூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம் செயல்படுகிறது. இதில், 2025 - 26ம் ஆண்டுக்கான நகை மதிப்பீடு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை, வரும் 24ல் துவங்கி ஏப்., 13ம் தேதி வரை நடைபெறும். ஏப்., 15ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும்.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், பயிற்சியில் சேரலாம். 15 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். தமிழில் மட்டுமே பயிற்சி வகுப்பு நடைபெறும்.பயிற்சிக்காக, 4,550 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். கல்லுாரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரும் சேரும்வகையில், வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை வகுப்பு நடத்தப்படும்.பயிற்சி முடிப்போருக்கு, அரசு வங்கி, கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்கள், தனியார் நிதி நிறுவனம், தனியார் நகைகடைகளில் வேலைக்கு சேரலாம். விவரங்களுக்கு, 04258 220640 என்கிற எண்ணிலும், gmail.comஎன்ற இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை