மேலும் செய்திகள்
மது பாட்டில் பதுக்கல்: அ.தி.மு.க., நிர்வாகி கைது
06-Sep-2025
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், முத்துார் - காங்கயம் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமை வகித்தார். முத்துார் - காங்கயம் கூட்டுக்குடிநீர் திட்டத்திலுள்ள சுத்திகரிப்பு மற்றும் நீருந்து நிலையங்களை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப்பின் கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் கூறியதாவது: ஈரோடு மாவட்டம், கொடுமுடியில், காவேரி ஆற்றை நீராதாரமாக கொண்டு, முத்துார் - காங்கயம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கொடுமுடியில் முதன்மை நீரேற்றம் செய்யப்பட்டு, இச்சிப்பாளையத்தில் சுத்த நீரேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை இரண்டு கட்டங்களாக இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக எட்டு ஒன்றியங்களில் உள்ள, 268 விடுபட்ட குடியிருப்புகளுக்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம் நகராட்சிகள், முத்துார், ருத்ராவதி, மூலனுார், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் சின்னக்காம்பாளையம் பேரூராட்சிகள்; பரமத்தி, கொடுமுடி, சென்னிமலை, வெள்ளகோவில், தாராபுரம், காங்கயம், மூலனுார், குண்டடம் ஒன்றியங்களில், 1,790 குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கொடுமுடி, இச்சிபாளையம், மேட்டுக்கடை, வெள்ளகோவில் மற்றும் தாராபுரம் பகுதிகளுக்காக, செறிவூட்டப்பட்ட கான்கிரீட் குழாய்கள் மாற்றப்பட்டுள்ளன. காங்கயம், குண்டடம், சென்னிமலை பகுதிகளில், 51.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்நார் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். தமிழ்நாடு வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் விநாயகம், செயற்பொறியாளர் செல்விராணி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
06-Sep-2025